அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலைக் கருத்தில் கொண்டு வடக்கு அவையின் அமர்வுகள் ஒத்திவைப்பு


வடக்கு மாகாண சபையின் அமர்வுகளை தேர்தல் காலத்தை கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 32 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கேட்கவிருந்த வினாக்கள் முதலமைச்சர் சுவீனம் காரணமாக சமுகமளிக்காமையினால் அடுத்த அமர்விற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன் உறுப்பினர் ரவிகரன் கொண்டுவந்த இரண்டு பிரேரணைகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல அவைத்தலைவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்றும் ஏகமனதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் சபை அமர்வுகளை மேற்கொள்வது பொருத்தமற்றது என குறிப்பிட்ட அவைத்தலைவர் சபையை 11மணியுடன் ஒத்திவைத்தார். 

 எதிர்வரும் 33 ஆவது மாதாந்த அமர்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.  \
தேர்தலைக் கருத்தில் கொண்டு வடக்கு அவையின் அமர்வுகள் ஒத்திவைப்பு Reviewed by NEWMANNAR on July 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.