அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபரிடம் கல்விச்சேவைக்காக துரையம்மா அன்பகத்தினர் விண்ணப்பம்


மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் திரு ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களிடம் 15-07-2015; புதன் கிழமை காலை சந்தித்த துரையம்மா அன்பகத்தின் தலைவர் வி.உதயன் அவர்கள் வெள்ளாங்குளம்-பரறாயன்குளம்;-தலைமன்னார்-அரிப்பு நான்கு கிராமங்களை உள்ளடக்கிய மத்திய நிலையமாக விளங்கும்
 அடம்பன் கிராமத்தில் அன்னை இல்லம் ஒன்றை அமைக்க காணிப்பரப்பினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தினை கையளித்து கலந்துரையாடினர்.

 கல்விச்சேவைக்காக  துரையம்மா அன்பகத்தினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டத்தின் மாணவர்களின் குறிப்பாக வறுமையில் கல்வியினை தொடரமுடியாத உள்ள மாணவர்களுக்காக அன்னை இல்லம் ஒன்றை அமைத்து அவர்களுக்கு உணவு உடையுடன் தங்குமிடவசதிகளை அமைத்துக்கொடுத்து கல்வியில் முன்னேற்றம் அடைந்து வாழ்வில் சிறக்க வழியமைக்கும் முகமாகவே இவ்கலந்துரையாடல் இடம்பெற்றது.

துரையம்மா அன்பகத்தின் விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் கல்விச்சேவைக்காக என்றும் உதவியாக இருப்போம் அதேவேளை அன்னை இல்லம் அமைப்பதற்கான காணிவழங்குவது தொடர்பானவிடையத்தினை தமது உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்தான் நல்ல முடிவைத்தரமுடீயும் என உறுதியளித்துள்ளார்.


மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபரிடம் கல்விச்சேவைக்காக துரையம்மா அன்பகத்தினர் விண்ணப்பம் Reviewed by NEWMANNAR on July 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.