புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்.,மத சுதந்திரத்துடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம்-றிசாத் பதியுதீன்
இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழ்வது போல் - மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்.,மத சுதந்திரத்துடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம்.என
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வானிபத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழ்வது போல் - மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்.,மத சுதந்திரத்துடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புனித ரமழான் மாதம் நிறைவடைந்து நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலகம் பூராகவும் வாழும் இலங்கை முஸ்லிம் சமுகத்தினருக்கு தனது பெருநாள் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்வதில் மட்டட்ட மகிழ்ச்சியடைகிறேன்
கடந்த முப்பது நாட்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு புனித நோன்பையும் நோற்றவர்களாக அதிக தானம் தர்மங்களை செய்து பெரும் நன்மைகளை ஈட்டிக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் இன்று பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.
புனித ரமழான் மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு துரதிஷ்டவசமாக வெளியாகிய போதிலும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தேர்தல் செயற்பாடுகளிலிருந்து பெருமளவில் ஒதுங்கியிருந்து புனித ரமழான் மாதத்தை அனுஸ்டித்தார்கள் என்பதை பொறுப்புமிக்க கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையில் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
புனித ரமழானில் நாம் மேற்கொண்ட வணக்க வழிபாடுகள் தான தர்மங்கள் ஏழை எளியோரின் பசியை உணர்ந்த செயற்பாடுகளை இந்த முப்பது நாட்களுடன் மட்டுப்படுத்தி விடாது எதிர்காலத்திலும் நாம் அவ்வாறே இறைநேசர்களாக வாழ இந்த நாளிலிருந்து திடசங்கற்பம் பூணுவோம்.
இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழக் கூடிய சூழலும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இந்த கௌரவமான சூழலை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும் ஆங்காங்கே இனவாதக் குழுக்களால்; முடுக்கவிட்ட வண்ணம் உள்ளன.இந்த நிலையில் வடக்கில்இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பெரும் சவால்களை கொண்டதாக மாறியுள்ளது.முஸ்லிம் சமூகத்திற்கான ஒன்றுபட்ட அமைப்பொன்றின்மை இந்த சவால்கள் தலைவிரித்தாட பிரதானமானதொரு காரணியாகும்,இவ்வாறான நிலையில் நிலையில் குறுகிய நோக்கங்களை மறந்து அரசியல் ரீதியான பலமொன்றினை அடைவதன் மூலம் இந்த சக்திகளுக்கு நல்ல பாடத்தை புகட்டலாம்
இவற்கை கவனத்தில் கொண்டு வடபுல முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் நல்லதொரு அமைதியானதும்,தமது மண்ணில் அனைத்தையும் பெற்று வாழக் கூடிய சூழல் ஏற்பட இன்றைய தினத்தில் பிரார்த்திக்குமாறும்,நோற்ற நோன்பு காலங்களில் விசேடமாக வட புல முஸ்லிம்களுக்காக கேட்ட துஆக்களுக்கு அல்லாஹ்விடத்தில் சிறந்த கூலி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதுடன்,அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே இந்த இனவாத கும்பல்களிலிருந்து முஸ்லிம் சமுகம் பாதுகாப்பு பெறவும், இடம்பெயர்ந்த மற்றும் வெளியேற்றப்;பட்ட முஸ்லிம்கள் மலரும் புது ஆட்சியில் கௌரவமாக மீள்குடியேறவும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகம் நிம்மதியாக வாழவும் இன்றைய நாளில் இரு கரம் ஏந்துவோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்.,மத சுதந்திரத்துடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம்-றிசாத் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:
No comments:
Post a Comment