மன்னாரில் வீட்டுச்சின்னத்திற்கு பதிலாக மணிக்கூட்டை காட்டும் போலி மாதிரி வாக்குச்சீட்டுக்கள் வினியோகம்-மக்கள் விசனம்.-படங்கள்
மன்னாரில் வாக்களர்களை குழப்பும் வகையில் போலியான மாதிரி வாக்குச் சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டு வருவதாக மன்னார் வாக்காளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக மன்னார் பகுதியில் உள்ள பல கிராமங்களில் குறித்த போலியான மாதிரி வாக்குச் சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
சரியான மாதிரி வாக்குச் சீட்டில் 3 ஆவதாக இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வீட்டுச்சின்னம் காணப்படுகின்றது.ஆனால் போலியான மாதிரி வாக்குச் சீட்டிற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னமாக மணிக்கூடு காணப்படுகின்றது.
மன்னார் எழுத்தூர்,பெரியகமம்,செல்வநகர் போன்ற கிராமங்களில் இவ்வாறான போலியான மாதிரி வாக்குச் சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் போலியான வாக்குச் சீட்டுக்களை வினியோகிப்பவர்கள் வாக்குச் சீட்டில் உள்ள 7 ஆவது சின்னமான யானைக்கு புள்ளடி இட்டு விருப்பு இலக்கங்களான 1 மற்றும் 9 ஆகிய இரு இலக்கங்களுக்கும் புள்ளடி இட்டு காட்டியுள்ளனர்.
குறித்த செயற்படுகளில் இளம் யுவதிகள் சிலர் செயற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியில் இலக்கம் 1 இல் அமைச்சர் றிஸாட் பதியுதீனும் இலக்கம் 9 இல் மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மார்க் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
குறித்த போலி வாக்குச் சீட்டினால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உண்மையான வாக்குச் சீட்டில் 3 ஆவது சின்னமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னம் காணப்படுவது வழமை.ஆனால் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களை குழப்பும் வகையில் குறித்த போலி மாதிரி வாக்குச் சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் இலக்கம் 9 இல் போட்டியிடும் வேட்பாளரான ராஜன் மார்க் என்பவரது சுவரொட்டிகள் அவரது சொந்தக்கிராமமான மன்னார் வங்காலையில் தொடர்ச்சியாக சேதப்படுத்தப்படுவதோடு கழிவு ஒயில் மற்றும் மாட்டுச் சானம் ஆகியவற்றினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் வீட்டுச்சின்னத்திற்கு பதிலாக மணிக்கூட்டை காட்டும் போலி மாதிரி வாக்குச்சீட்டுக்கள் வினியோகம்-மக்கள் விசனம்.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 09, 2015
Rating:
No comments:
Post a Comment