அண்மைய செய்திகள்

recent
-

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு


சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

சித்தாண்டி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இப் பரப்புரை கூட்டத்தில் மாவை.சேனாதிராஜா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டம் தோறும் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! அவர்களுக்கு நியாயம் வேண்டும்

இணைந்த வடகிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கான தனியான மாநிலமே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், அதனைப்பெறும் வகையில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமது பலத்தினை வெளிப்படுத்தும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்ககளப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று காலை தொடக்கம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன்,

நடை பெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத்தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தெளிவூட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம்.

சம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளவு. இதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு எமது தேசியப் பயணத்திற்கான தீர்வு வெளிவரவேண்டும்.

தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளிவந்துள்ளது அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூறமுடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது.

அதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தல் மூலம் நீங்கள் நிருபிக்க வேண்டும். இதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். செயற்படுவீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.

எமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வுகிடைக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடும் சர்வதேசத்தின் நிலைப்பாடும் இதுதான். விசுவாசமான நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.

இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமைய இருக்கின்ற புதிய நாடாளுமன்றத்தினூடாக இதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ் விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேணடும். அரசியல் கலைகலாசார, பொருளாதார, அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.







எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு Reviewed by NEWMANNAR on August 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.