அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டம்


மன்னார் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

22.08.2015 காலை 10.00 மணி, 

கலையருவி மண்டபம்

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பெருமதிப்பிற்குரிய உறுப்பினராகிய உங்களுக்கு எமது செந்தமிழ் வணக்கம். மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளில் தாங்கள் ஆற்றிவரும் இடையுறாத தமிழ் பணிக்கு எமது நன்றிகள்.


எதிர்வரும் 22.08.2015 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கலையருவி, இல: 116/3, புனித ஜோசப் வீதி, பெட்டா, மன்னார் எனும் முகவரியில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

தமிழ்ச்சங்க வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தும் விதமாகவும், தங்களின் மேலான ஆலோசனைகளோடு யாப்பில் சில சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கும், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் சங்கம் சார்ந்த கடமைகள், உரிமைகள், சலுகைகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் சாதாரண உறுப்புரிமையை பெற்று இதுவரை புதுப்பிக்காத உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 10.00 மணி வரை புதுப்பிக்க இயலும். உறுப்புரிமையை புதுப்பிக்காத உறுப்பினர்கள் உறங்குநிலை உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் மொத்த தொகையைச் செலுத்தி தங்கள் உறுப்புரிமையைப் புதுப்பித்தால் மட்டுமே பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதையும் தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம்.

அத்துடன் உறுப்புரிமையைப் புதுப்பித்த உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டிலுள்ள ஆயுள் கால உறுப்பினர்களின் எண்ணிக்கையே தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையாகக் கருத்திற்கொண்டு இக்கூட்டமும் எதிர்காலத் தொடர்பாடல்களும் நடைபெறும் என்பதையும், சங்கம் தற்பொழுது சிறந்த நிதிநிலையைப் பேணிவருகிறது என்பதையும் தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைக்க விரும்புபவர்கள் மன்னார் தமிழ்ச்சங்க இணைய தளத்தில் உள்ள உறுப்புரிமைப் படிவத்தை பதிவிறக்கம் செய்து ஆர்வமுள்ளவர்களை இணைக்கலாம். இணையதள முகவரி: http://mannartamilsangam.com/

அனைத்து உறுப்பினர்களும் முகப்புத்தகத்தில் உள்ள மன்னார் தமிழ்ச்சங்க மூடிய குழுவில் இணைவதன் மூலம் சங்க நடவடிக்கைகளை உடனுக்குடன் அறியவும், உங்கள் பெறுமதி வாய்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கவும் முடியும். முகவரி: https://www.facebook.com/groups/thamilsangammannar/

மன்னார் தமிழ்ச்சங்க செயற்பாடுகள் குறித்த குறுந்தகவலை உங்கள் அலைபேசிகளில் இலவசமாகப் பெற: Follow mnrtlsm என தட்டச்சு செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

சமூகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் உங்களின் வருகையை எதிர்பார்ப்பதோடு, இதுதொடர்பாக தாங்கள் மேற்கொள்ளும் சகலநடவடிக்கைகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்ப்பணியில்

மன்னார் அமுதன்
பொதுச்செயலாளர்
மன்னார் தமிழ்ச்சங்கம்
மன்னார் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டம் Reviewed by NEWMANNAR on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.