க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்...
தேர்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட பரீட்சைகள் நாளை (24) ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளில் முறைகேடு இடம்பெற்றால் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைவிட பரீட்சைகள் திணைக்களத்தின் தெலைபேசி இலக்கங்களான 0112 78 42 08 அல்லது 0112 78 45 37 என்ற இலக்கங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை பதிவுசெய்து கொள்ளமுடியும்.
இவ்வாறு பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார சுட்டிக்காட்டினார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்...
Reviewed by Author
on
August 23, 2015
Rating:

No comments:
Post a Comment