பிரித்தானிய செய்தி 6 வயதில் இழந்த ஆண் உறுப்பை 43 வயதில் மீட்டு தந்த மருத்துவர்கள்: மகிழ்ச்சியில் பிரித்தானியர்...
பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியை சேர்ந்தவர் முகமது அபாத்.
அவரது 6வது வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது ஆண் உறுப்பு முழுவதும் சிதைந்துபோனது.
அவர் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு செயற்கை ஆண் உறுப்பு பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
இதற்காக அவரது கையில் இருந்து சதைகள் மற்றும் கொழுப்புகள் எடுக்கப்பட்டதாகவும் அதை முழுமைப்படுத்த 3 ஆண்டுகள் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் 11 மணி நேர முயற்சிக்கு பின் அவருக்கு செயற்கை ஆண் உறுப்பு பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய செய்தி 6 வயதில் இழந்த ஆண் உறுப்பை 43 வயதில் மீட்டு தந்த மருத்துவர்கள்: மகிழ்ச்சியில் பிரித்தானியர்...
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment