அண்மைய செய்திகள்

recent
-

புற்றுநோயாளிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல ஹாலிவுட் நடிகர்: விருப்பம் நிறைவேறியதும் உயிர் பிரிந்த பரிதாபம்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த நோயாளி ஒருவர் பிரபல ஹாலிவுட் நடிகரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறிய உடனே உயிர் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கெயிக் ரோபின்சன்ஸ் என்ற 19 வயது வாலிபர் புற்றுநோயிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ரோபின்சன்ஸிற்கு புற்று நோய் தாக்கியுள்ளது 2014ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக டெக்சாஸில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ரோபின்சன்ஸின் நோயை குணப்படுத்த முடியாது என்பதால், தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு, அதனை மறப்பதற்காக தனது அன்றாட நிகழ்வுகளை பேஸ்புக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

ரோபின்சன்ஸின் நிலையை கண்டு ஆயிரக்கணக்கான நபர்கள் அவருக்கு நண்பராகி அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

கடந்த மாதம், மரணம் நேரிடுவதற்கு முன்னர் தனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகரான ஆடம் சாண்டலரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என தனது விருப்பத்தை வீடியோவாக பதிந்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

சுமார் 42 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை பார்த்து அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என அந்த வீடியோவை பரப்பியுள்ளனர்.

அதிஷ்டவசமாக, அந்த வீடியோ ஆடம் சாண்டலரின் உதவியாளர் பார்வையில் சிக்கியுள்ளது. ரோபின்சன்ஸின் விருப்பத்தை அறிந்து அவர் அந்த வீடியோவை ஆடம் சாண்டலருக்கு காட்டியுள்ளார்.

வீடியோவை பார்த்து மனம் உருகிய ஆடம் சாண்டலர் ரோபின்சன்ஸை உடனடியாக தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அவரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை குடும்பத்துடன் ஜோர்ஜியா வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.

ஜோர்ஜியா நகரில் படப்பிடிப்பில் இருந்த ஆடம் சாண்டலரை ரோபின்சன்ஸ் சந்தித்துள்ளார். அவரை வரவேற்று கட்டி தழுவிய ஆடம் சாண்டலர் சுமார் 6 மணி நேரம் அவருடன் இருந்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் ரோபின்சன்ஸை ஒரு நடிகராக பாவித்து ஒரு ஹீரோவிற்குரிய அத்தனை வசதிகளையும் ஆடம் சாண்டலர் செய்து கொடுத்துள்ளார்.

ஆடம் சாண்டலருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ரோபின்சன்ஸ் மகிழ்ச்சியுடன் மருத்துவமனை திரும்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக புற்றுநோயின் வீரியம் அதிகரித்த நிலையில், நேற்று பிற்பகல் வேளையில் ரோபின்சன்ஸின் உயிர் பிரிந்துள்ளது.

இந்த தகவலை பேஸ்புக்கில் வெளியிட்ட அவரது குடும்பத்தினர், ரோபின்சன்ஸ் மீது அன்புக்காட்டிய நடிகர் ஆடம் சாண்டலர் மற்றும் ஆயிரக்கணக்கான நண்பர்களுக்கு நன்றி கூறுவதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்


புற்றுநோயாளிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல ஹாலிவுட் நடிகர்: விருப்பம் நிறைவேறியதும் உயிர் பிரிந்த பரிதாபம்... Reviewed by Author on August 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.