தாய்மை அடைய உதவும் செவிப்பன்னி...
குழந்தையில்லாத பெண்கள் தாய்மையடைவதற்கு உதவும் செவிப்பன்னியொன்றை பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
யொனோ என அழைக்கப்படும் மேற்படி செவிப்பன்னி உபகரணம் பெண்களின் கருமுட்டை வெளியேறும் சக்கரத்தை கண்காணித்து அவர்களுடைய இனவிருத்தி ஆற்றல் அதிகரிக்கும் தருணத்தை கணிப்பிட உதவுகிறது.
இந்த செவிப்பன்னி உபகரணம் பெண்களின் உடலின் வெப்பநிலை கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது.
பெண்களின் உடல் வெப்பநிலை அவர்களது இனவிருத்தி ஆற்றல் அதிகரிக்கும் காலத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக சிறிது உயர்வாக காணப்படுவது வழமையாகும்.
யொனோ செவிப்பன்னி உபகரணம் ஒரு இரவுக்கு 70 தடவைகளுக்கு மேல் என்ற ரீதியில் ஒருவரது உடல் வெப்பநிலையைக் கணிப்பிடுகிறது.
பின்னர் புளூருத் தொழில்நுட்பம் மூலம் தரவுகளை யொனோ உபகரணத்தின் பிரயோக மென்பொருளுக்கு அனுப்பி வைக்கிறது.
இதன் மூலம் அந்த உபகரணம் இனவிருத்தி ஆற்றல் தொடர்பான கணிப்பீட்டை மேற்கொண்டு அது தொடர்பான அறிவிப்பைச் செய்கிறது. இந்த உபகரணமானது அமெரிக்க ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வனேஸ்ஸா ஸி என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாய்மை அடைய உதவும் செவிப்பன்னி...
Reviewed by Author
on
August 08, 2015
Rating:

No comments:
Post a Comment