உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல்...
சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையில் அவுஸ்திரேலிய வலைப் பந்தாட்ட சங்கம் முன்னின்று நடத்தும் 14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகள் சிட்னி ஒலிம்பிக் பார்க் உள்ளக அரங்கில் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
10 தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன்களான நியூஸிலாந்துஇ ட்ரினிடாட் அண்ட் டுபாகோ ஆகியன உட்பட 16 நாடுகள் இவ் வருட உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்றன.
முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை தனது முதலாவது போட்டியில் நடப்பு ஆசிய சம்பியன் சிங்கப்பூரை இன்று சந்திக்கவுள்ளது.
இந்தப் போட்டி சிட்னி ஒலிம்பிக் பார்க் விளையாட்டரங்கில் அமைந்துள்ள நெட்போல் சென்ட்ரல் உள்ளக அரங்கில் சிட்னி நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரிடம் அடைந்த தோல்விக்கு பிராயச்சித்தமாக இன்றைய போட்டியில் வெற்றிபெற்று ஆசியாவின் முதல் நிலை வலைப்பந்தாட்ட அணி என்பதை இலங்கை நிரூபிக்கும் என இலங்கை அணி பயிற்றுநர் தீப்தி அல்விஸ் தெரிவித்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு இரண்டு மாதங்கள் மாத்திரமே இலங்கை அணி பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் வீராங்கனைகள் சர்வதேச தரத்திற்கேற்ப முழுத் திறமையையும் வெளிப்படுத்த காத்திருக்கின்றனர் என அவர் கூறினார்.
தீப்தி அல்விஸின் மகள் செமினி அல்விஸ் இலங்கை அணியின் தலைவியாகவும் கயனி திசாநாயக்க உதவி அணித் தலைவியாகவும் விளையாடுகின்றனர்.
இவர்களை விட திசலா அல்கம, தர்ஷிகா அபேவிக்கிரம, தீபிகா தர்ஷனி அபேகூன், சத்துரங்கி ஷானிக்கா, சுரேக்கா குமாரி, விராஜி சாமரிக்கா, ஹசித்தா மெண்டிஸ், தில்லினி தினேஷிக்கா வத்தேகெதர, கிம்ஹானி கயாஞ்சலி அமரவன்ச, ஜொசஃபின் நிரோஷினி பாய்வா ஆகியோரும் இலங்கை வலைப்பந்தாட்டக் குழாமில் இடம்பெறுகின்றனர்.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல்...
Reviewed by Author
on
August 08, 2015
Rating:

No comments:
Post a Comment