யூத குடியேற்றக்காரர்களின் தாக்குதலில் பலஸ்தீன குழந்தை உடல் கருகி பலி
மேற்குக் கரையில் யூ த குடியேற்றக்காரர்கள் பலஸ்தீன வீடுகளின்; மீது தீ வைத்ததில் ஒரு வீட்டில் இருந்த 18 மாத ஆண் குழந்தை உடல் கருகி பலியானதோடு மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
தெற்கு நப்லூஸின் துமா கிராமத்தில் இருக்கும் வீடுகளின் மீதே நேற்று வெள்ளிக்கிழமை அதிகா லையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் குடியேற்றக்காரர்கள் இரு வீடுகளின் ஜன்னல் கதவை உடைத்து எரியக்கூடிய திரவ த்தை ஊற்றி தீவைத்ததாக குடியிருப்பாளர் ஒரு வர் விபரித்துள்ளார்;.

வீடு தீப்பற்றி எரியும்போது ஒன்றரை வயது குழ ந்தையுடன் அவர்களது பெற்றோர் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் மற்றும் நான்கு வயது மூத்த மகன் தீக்காயங்களுடன் உயிர்தப்பியபோதும் குழந்தை தீயில் சிக்கியுள்ளது. சம்பவம் குறித்து கிராமத் தைச் சேர்ந்த இப்ராஹிம் தவாபிஷ் விபரிக்கும் போது,
'தீக்காயங்களுடன் பெற்றோர்கள் வெளியில் இருந்தார்கள். குழந்தைகள் வீட்டிற்குள் இருப்ப தாக அவர் குறிப்பட்டதை அடுத்து ஒரு குழந் தையை காப்பற்றி வெளியே கொண்டு வந்தோம். மற்றொரு குழந்தை இருப்பதாக அவர்கள் குறிப் பிட்டார்கள். எனினும் தீ வேகமாக பரவி இருந் ததால் குழந்தை இருக்கும் அறைக்கு செல்ல முடியாமல் போனது. மீட்பு படையினர் வரும் வரை குழந்தை தீயில் சிக்கி இருந்தது" என்றார்.
அருகில் இருக்கும் இஸ்ரேல் குடியேற்றத்தை சேர்ந்த குறித்த குடியேற்றக்காரர்கள் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டின் மீதும் இவ்வாறு தீ மூட்டி தாக்குதல் நடத்தியதில் அந்த வீடு பகுதி அளவு சேதமடைந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகில் இருக்கும் விட்டில் ஹிப்ரு மொழியில் 'பழிக்கு பழி" என்று எழுதியுள்ளனர்.
குறித்த பலஸ்தீன கிராமத்தின் வாயில் பகுதி யில் இந்த வீடு அமைந்திருப்பதால் தாக்குதல் தாரிகள் தீமூட்டிவிட்டு கிராம மக்கள் ஒன்றுதிர ளும் முன்னர் தப்பிச்செல்ல முடியுமாகியுள்ளது.
"ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதை நாம் கண் டோம். அவர்களை நாம் துரத்திப் பிடிக்க முயன்ற போதும் அவர்கள் அருகில் இருக்கும் மால் அப் ராயிம் குடியேற்ற பகுதிக்குள் நுழைந்துவிட்டனர்" என்று 23 வயது முஸல்லம் டவப்'குறிப்பிட்டார். 'சந்தேகத்திற்கு இடமான தேசியவாத நோக் கம் கொண்ட தாக்குதல்" என்று இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் லுபா சம்ரி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "பூர்வாங்க விசாரணைகளின்படி சந் தேக நபர்கள் அதிகாலையில் கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளுக்கு தீமூட்டி, ஹிப்ரு மொழி யில் சுவரில் எழுதியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பம் தொடக்கம் கிழ க்கு nஜரூசலம் மற்றும் மேற்குக் கரையில் பல ஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் குடியேற்றக்காரர்கள் குறைந்தது 120 தாக்குதல்களை நடத்தியிருப்ப தாக ஐ.நா. அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குடி யேற்றக்காரர்களின் இவ்வாறான தாக்குதல்களின் போது இஸ்ரேல் படையினர் அவர்களுக்கு பாது காப்பு வழங்குவதாகவும் பலஸ்தீனர்களை பாது காப்பதற்கு இஸ்ரேல் நிர்வாகம் போதிய நடவடி க்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு உள் ளது. ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் ய+தர்களுக்கு மாத்திரமான குடி யேற்றங்களில் 500,000க்கும் அதிகமான இஸ்ரேலி யர்கள் வாழ்கின்றனர். இது சட்டவிரோதமான நடவடிக்கை என்று சர்வதேசம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
யூத குடியேற்றக்காரர்களின் தாக்குதலில் பலஸ்தீன குழந்தை உடல் கருகி பலி
Reviewed by Author
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment