கல்லீரல் பிரச்சனையால் இடம் மாறிய இதயம்: தொடரும் திருமண பந்தம் ...

பிரித்தானிய மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போது சந்தித்துக்கொண்ட இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பிரித்தானியாவை சேர்ந்த வாய்னே போடென்(49), ஷெல்லி(35) ஆகிய இருவரும் கல்லீரல் பிரச்சனையால் மாற்று கல்லீரல் பொருத்துவதற்காக அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஷெல்லி குணமாகி முதலில் வீடு திரும்பியுள்ளார், வெய்னேவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதை அறிந்த பின்னர் மருத்துவமனைக்கு ஷெல்லி நேரில் வந்து பார்த்தார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து, அடுத்த வருடத்திலேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணிபுரிவோர் முழுவதும் இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
கல்லீரல் பிரச்சனையால் இடம் மாறிய இதயம்: தொடரும் திருமண பந்தம் ...
Reviewed by Author
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment