அண்மைய செய்திகள்

recent
-

நான்காவது தடவையாகவும் பிரதமராக ரணில் பதவியேற்பு! மஹிந்தவும் கலந்து கொண்டார்








ரணில் வி்க்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னார் பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ரணில் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பி்டத்தக்கது.

மஹிந்த உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பங்கேற்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பஙகேற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நிகழ்வின் முன் வரிசை ஆசனமொன்றில் மஹிந்த அமர்ந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் இந்த நிகழ்வில் பங்கேற்றபதற்காக வருகை தந்தார்.

இதேவேளை ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்களும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கரு ஜயசூரிய, அர்ஜுண ரணதுங்க, மேயர் முஸம்மில் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காகுமாரதுங்க இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.

இன்று பதவிப் பிரமாணம் மேற்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க , 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை வகிக்கப்போகும் முதலாமவர் என்ற பெருமைக்குரியவராகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக இணைப்பு

இலங்கையின் 16வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி முதல் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையும் 2001 ஆம் டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி வரையும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 முதல் இதுவரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இளம் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் ஒரே நபராவார்.

நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது இலங்கை தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக்கூடிய விருப்பு வாக்குகளாகும்.

இலங்கையில் முதலாவது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க பதவி வகித்ததுடன் அடுத்ததாக அவரது புதல்வர் டட்லி சேனாநாயக்க பிரதமராக பதவி வகித்தார்.

இதனையடுத்து சேர் ஜோன் கொத்தலாவல, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, டப்ளியூ. தஹாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆர். பிரேமதாச, டி.பி. விஜேதுங், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, ரட்ணசிறி விக்ரமநாயக்க, டி.எம். ஜயரத்ன ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
நான்காவது தடவையாகவும் பிரதமராக ரணில் பதவியேற்பு! மஹிந்தவும் கலந்து கொண்டார் Reviewed by Author on August 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.