புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு - புதிய அமைச்சரவையில் 40 பேர்?
நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, இந்த சிறப்பு வர்த்தமானி நேற்று மாலை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இதில் மாவட்ட ரீதியாக – ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் தெரிவாகியுள்ள- 196 உறுப்பினர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இதில் இடம்பெறவில்லை.
தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குள் தமது உறுப்பினர்களின் பெயர்களை அறிவிப்புமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரியுள்ளது.
சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை இந்த இணைப்பில் பார்வையிடலாம்
புதிய அமைச்சரவையில் 40 பேர்?
அமைச்சரவை பதவிகள் வழங்கும் போது அதற்காக தகுதியானவர்களை நியமிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடியான முடிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு முன்னர், தங்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை அடிப்படையாக கொண்டு அமைச்சு பதவிகளுக்கு கோரிக்கை முன்வைக்க கூடாதெனவும், அவ்வாறானவைகளை புறக்கணிப்பதற்கும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பில் தேசிய அரசாங்கத்தில் இணையும் உறுப்பினர் குழு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் நேற்று மாலை வரையிலும் பிரதமருக்கு கிடைக்கவில்லை. அந்தக் கோரிக்கைகள் கிடைத்த பின்னர் அதனை பரிசீலித்து அமைச்சரவை உட்பட அமைச்சரவைக்கான நியமிப்புகள் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் இதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அமைச்சரவைகள் நியமனங்கள் இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர்களின் பதவி பிரமணங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமைச்சரவைக்கு 40 அமைச்சர்கள் என மட்டுப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு - புதிய அமைச்சரவையில் 40 பேர்?
Reviewed by Author
on
August 21, 2015
Rating:

No comments:
Post a Comment