பாதுகாப்பு மாநாடு இம்முறையும் நடத்தப்படவுள்ளது...
தேசிய பாதுகாப்பு மாநாடு இம்முறையும் நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தினர் வருடாந்தம் இந்த பாதுகாப்பு மாநாட்டை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை செப்டம்பர் மாதம் 1ம் மற்றும் 2ம் திகதிகளில் கொழும்பு கலதாரி நட்சத்திர ஹோட்டலில் மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வதேச சவால்களின் எதிரில் தேசிய பாதுகாப்பு என்ற தொனிப் பொருளில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பாதுகாப்பு குறித்து விசேட நிபுணத்துவ கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளன.
தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலான பாதுகாப்பு குறித்து ஸ்திரமான திட்டமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்சவின் பதவி வகித்த காலத்தில் இந்த விசேட பாதுகாப்பு மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மாநாடு இம்முறையும் நடத்தப்படவுள்ளது...
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment