அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து இறுதிப் போட்டி இன்று...
உலகக் கிண்ண வலைபந்தாட்ட இறுதி ஆட்ட வரலாற்றில் அவுஸ்திரேலியாவும் நியூ ஸிலாந்தும் ஆறாவது தடவையாக ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளதுடன் உலக சம்பியன் பட்டத்திற்கு அவுஸ்திரேலியா 11ஆவது தடவையாகவும் நியூஸிலாந்து ஐந்தாவது தடவையாகவும் குறிவைத்து களம் இறங்குகின்றன.
1991இலிருந்தே இறுதி ஆட்டம் விளையாடப்பட்டு வருகின்றது. உலக வலைபந்தாட்ட சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் சிட்னி ஒலிம்பிக் பார்க் ஆல்ஃபோன்ஸ் எரினா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் (இலங்கை நேரப்படி முற்பகல்) நடைபெறவுள்ளது.
இவ் வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் நியூஸிலாந்திடம் மாத்திரம் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
குழு "ஏ"யிற்கான லீக் சுற்றில் 52 க்கு 47 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற நியூ ஸிலாந்து இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்று மீண்டும் சம்பியனாவதற்கு உறுதிபூண்டுள்ளது. இவ் வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் நியூஸிலாந்து மாத்திரமே சகல போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. எவ்வாறாயினும் இறுதி ஆட்டம் தங்களுக்கு இலகுவாக அமையப்போவதில்லை என அவுஸ்திரேலிய அணித் தலைவி லோரா கெய்ட்ஸும் கசி கொப்புவாவும் தெரிவித்தனர்.
"எமது சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சற்று அழுத்தத்திற்கு மத்தியில் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்ளவுள்ளோம். லீக் சுற்றில் அடைந்த தோல்வியால் நாங்கள் சோர்ந்துவிட வில்லை. அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கான வியூகங்களை வகுத்து விளையாடவுள்ளோம்" என லோரா கெய்ட்ஸ் தெரிவித்தார்.
"இறுதி ஆட்டத்திலும் அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டு மீண்டும் உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்காக நாங்கள் கடும் முயற்சியுடன் விளையாடவுள்ளோம். அவுஸ்திரேலியாவை வலைபந்தாட்டத்தில் வெற்றிகொண்ட ஒரே ஒரு நாடு எமதாகும். எனவே இந்தப் போட்டியிலும் வெற்றிகொள்ள முடியும்
என்ற நம்பிக்கையுடன் இன்று களம் இறங்க வுள்ளோம்" என நியூஸிலாந்து அணித் தலைவி கெசி கொப்புவா தெரிவித்தார். இதேவேளை இங்கிலாந்துக்கும் ஜமெய்க்காவுக்கும் இடையிலான மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியும் நிரல்படுத்தலுக்கான போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன.
இலங்கை தொடர்ந்தும் தோல்வி ஸம்பியாவுக்கு எதிராக நெட்போல் சென்ட்ரல் அரங்கில் நேற்று நடைபெற்ற தீர்மானமிக்க நிரல்படுத்தல் போட்டியில் 70 க்கு 36 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தோல்வி யடைந்தது. உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அடைந்த ஏழாவது தோல்வி இதுவாகும். உயரம், உடற்கட்டமைப்பு அனைத்திலும் இலங்கை வீராங்கனைகளை விட குறைவாக காணப்பட்ட ஸம்பியா வீராங்கனைகள் ஆற்றலில் இலங்கை வீராங்கனைகளை விஞ்சியவர்களாக விளையாடினர். ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணியினர் சகலதுறைகளிலும் கோட்டை விட்டார்கள் என்று கூறுவதே பொருந்தும்.
இந்தத் தோல்வியை அடுத்து உலகக் கிண் ணப் போட்டிகளில் பங்குபற்றிய 16 நாடுகளின் நிரல்படுத்தலுக்கான சுற்றில் கடைசி இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் சிங்கப்பூரை இல ங்கை இன்று எதிர்த்தாடவுள்ளது.
ஏற்கனவே முன்னோடி லீக் சுற்றில் சிங்கப்பூ ரிடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்ய இலங்கை அணி முயற்சிக்கும் என பதில் அணித் தலைவி கயனி திசாநாயக்க தெரிவித் தார்.
வழமையான அணித் தலைவி செமினி அல்விஸின் முழங்காலில் ஏற்பட்டுள்ள கடும் உபாதையினால் அவர் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. இன்றைய போட்டியிலும் விளையாடுவது உறுதியில்லை.
அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து இறுதிப் போட்டி இன்று...
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment