சேவை மூப்புப்பட்டியல் கல்வி அமைச்சினால் வெளியீடு....
கல்வி நிருவாக சேவை:
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களின் சேவை மூப்புப் பட்டியலை கல்வி அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
வெளியிடப்பட்டுள்ள சேவை மூப்புப் பட்டியலில் மொத்தமாக 286 பேரின் பெயர்கள் வெளியிடப் பட்டுள்ளன.
அதில் 136 பேர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றும், மரணமடைந்தும், சேவையில் இருந்தும் நீக்கப்பட்டவர்களாவர். இதில் இருந்து தற்போது நாடளாவிய ரீதியில் 150 பேர் மாத்திரம் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் இரண்டாம் வகுப்பில் உள்ளனர்.
வட மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களாக சேவை மூப்பு அடிப்படையில் பின்வருவோர் உள்ளனர்.
திருமதி பி.எஸ். இரேனியஸ், எஸ்.எஸ். செபஸ்தியன், என். தெய்வேந்திரராஜா, எஸ். கிருஸ்ணகுமார், எம்.இராதாகிருஸ்ணன், எல்.எம். வெனிடன், எம்.எம். சியான், எஸ்.புஸ்பலிங்கம், எஸ். சுந்தரசிவம், வை.ரவீந்திரன், எஸ். நந்தகுமார், கே. வராத்ராஜமூர்த்தி, ஏ. இளங்கோ, ரீ. ஜோன் குயின்டஸ், வீ. சிaஸ்கந்தராஜா, எஸ். செபஸ்தியன், திருமதி கே. கந்தேஸ்வரி ஆகிய பதினேழு பேரும்.
கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களாக சேவை மூப்பு அடிப்படையில் பின்வரும் 14 பேர் உள்ளனர்.
எம்.எஸ்.ஏ. ஜலீல், எஸ். மனோகரன், எஸ். விஜேந்திரன், வீ. மயில்வாகனம், கே. சத்தியநாதன், எம். உலகேஸ்பரம், எம். ஐ. சேகு அலி, ஆர். சுகிர்தராஜன், ஏ.எல்.எம். முக்தார், ஏ.சி.எம். சுபைர், திருமதி. எம்.எம். மன்சூர், ஏ.எல்.எம். காசிம், செல்வி ஏ. கனகசூரியம். ஏ.எம். அஹமட் லெவ்வை ஆகியோரும் உள்ளனர்.
சேவை மூப்புப்பட்டியல் கல்வி அமைச்சினால் வெளியீடு....
Reviewed by Author
on
August 31, 2015
Rating:

No comments:
Post a Comment