தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் அங்கவீனமுற்றவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் அங்கவீனமுற்றவர்களையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிடுகின்றது.
குறிப்பாக அங்கவீனமுற்றவர்கள் தொடர்பில் சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகின்றார்.
இதுதவிர அவர்களின் அரசியல் ரீதியான உரிமைகளை உறுதிசெய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள சகல வாகனங்களிலும் அங்கவீனர்களை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஏனைய பிரதேசங்களிலும் அங்கவீனர்களை தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் அங்கவீனமுற்றவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:


No comments:
Post a Comment