அண்மைய செய்திகள்

recent
-

கை வெட்டப்பட்ட நிலையிலும் பரீட்சை எழுதிய மாணவன்! ஆசிரியர்கள் பாராட்டு...


விறகு வெட்டச் சென்ற போது கையில் படுகாயமடைந்த 10 வயதான ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் இன்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
குறித்த மாணவர் கடந்த 20ம் திகதி அன்று விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படைத் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவர் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது வலக்கையில் இருந்த கத்தி நழுவி இடக் கையை வெட்டியுள்ளது.

சம்பவத்தை அடுத்து இச்சிறுவன் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த சிறுவனின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்த டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர், சத்திர சிகிச்சையின் மூலம் கையை பொருத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் குறித்த மாணவன் இன்று இடம்பெற்ற பரீட்சையில் தோற்றியிருந்தமை பாராட்டதக்க விடயம் என மாணவனின் வகுப்பு ஆசிரியர்கள் உட்பட பலர் தெரிவித்திருந்தனர்.


கை வெட்டப்பட்ட நிலையிலும் பரீட்சை எழுதிய மாணவன்! ஆசிரியர்கள் பாராட்டு... Reviewed by Author on August 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.