9 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம் : 47 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்,,,
கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தன்னுடன் விளையாட வருமாறு 47 வயதான ஆலடியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் அழைத்ததாகவும் விளையாடிக் கொண்டிருக்கையில் தன் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் வல்வெட்டித்துறைப் பொலிஸில். புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நேற்று முன்தினம பிற்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அவ்வேளை சந்தேக நபரை 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமியை வல்வெட்டித் துறை பிரதேச வைத்தியசாலையில் பரிசோ தனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
9 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம் : 47 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்,,,
Reviewed by Author
on
August 01, 2015
Rating:
Reviewed by Author
on
August 01, 2015
Rating:


No comments:
Post a Comment