கிரேக்க பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு,,,
கிரேக்கப் பிரதமர் அலெக்ஸிஸ் தஸிபிராஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதுடன் முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், ஐரோப்பிய கடன் வழங்குனர்களிடமிருந்தான மூன்றாவது கட்ட பொருளாதார மீட்பு நிதியுதவியை தக்க வைத்துக்கொள்வதற்கு தேர்தல்களை நடத்த வேண்டிய தார்மீக கடமை தனக்குள்ளதாக கூறினார்.
தேர்தல் தினம் இதுவரை நிர்ணயிக்கப்படாத போதும், எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி மேற்படி தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தஸிபிராஸ், எதிர்வரும் தேர்தலில் இடதுசாரி சிரிஸா கட்சிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
எனினும் அவர் பொருளாதார மீட்பு நிதியுதவி தொடர்பான கடுமையான பொருளாதார கொள்கைகளால் சினமடைந்துள்ள கட்சி உறுப்பினர்கள் சிலரிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.
கிரேக்கமானது ஐரோப்பிய பாராளுமன்றங்கள் அங்கீகாரம் வழங்கியதையடுத்து பொருளாதார மீட்பு நிதியுதவியில் 13 பில்லியன் யூரோ பெறுமதியான பகுதியை வியாழக்கிழமை பெற்றுக் கொண்டது.
இது கிரேக்கத்திற்கு ஐரோப்பிய மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டிய 3.2 பில்லியன் யூரோ பெறுமதியான கடனை மீளச் செலுத்துவதற்கு வழிவகை செய்வதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அந்நாட்டிற்கு பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை தவிர்ப்பது சாத்தியமாகியுள்ளது.
அந்நாடு மொத்த பொருளாதார மீட்பு நிதியுதவியான 86 பில்லியன் யூரோ பெறுமதியான தொகையை எதிர்வரும் 3 வருடங்களுககு மேற்பட்ட காலப் பகுதியில் பெறவுள்ளது.
தஸிபிராஸ் தனது இராஜினாமா கடிதத்தை வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி புரோகோபிஸ் பவ்லோபோலஸிடம் கையளித் துள்ளார்.
கிரேக்க பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு,,,
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment