அண்மைய செய்திகள்

recent
-

தலைமைத்துவங்கள் மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவை...


வட, கிழக்கு மாகாணங்களில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைத்துவம் வகிக்கின்றார்கள். அந்த தலைமைத்துவ பதவி இளைஞர்களுக்கு செல்ல வேண்டு மென வட மாகாண முதலமை ச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மனித உரிமைகள் இல்லத்தினைச் சேர்ந்த வட கிழக்கு மலையகத்தினைப் பிரதி நிதித்துவப்படுத்திய இளைஞர்கள் ஜனநாயக முகவரி தேடும் இளைஞர்களின் சங்கமம் என்ற அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் நடைபெறவுள்ள தேர்தலின் சரி யானவர்களை தேர்ந்தெடுப்பது குறித்தும் தமது சிந்தனைகள் குறித்தும் 25 கோரிக்கைகள் கொண்ட மகஜர் ஒன்றினை கையளித்தும் முதலமைச்சருடன் கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருந்தது தெரிவிக்கும் போது தலைமைத்துவம் மாற வேண் டுமென்பது குறித்த ஊடகவிய லாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரி வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக் கையில் அடுத்த கட்டமாக தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அதேநேரம் தலை மைத்துவம் உற்சாகப்படுத்தபட வேண்டுமென்றும் கூறினார்.

தலைமைத்துவங்கள் மாற்றப் பட வேண்டியதென்பது கட்டாயம் நடக்கப்பட வேண்டிய ஒரு விடயம். சமூதாயத்தில் மாற்றத் தினை ஏற்படுத்த வேண்டுமென்று சிந்திப்பவர்கள் இளைஞர் யுவதிகளாக இருக்கின்றார்கள்.

வயது வந்தவர்கள் சமுதாயம் இருக்கின்ற வகையில் கொண்டு செல்ல நினைக்கின்றார்களே தவிர சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.

சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமென்ற எண்ண த்தினை கொண்டவர்கள் இளை ஞர்கள் யுவதிகள், இளைஞர்களின் எண்ணத்தினை தான் வரவேற்ப தாகவும் வட மாகாண முதல மைச்சர் கூறினார்.

மாற்றம் ஏற்பட்டால் மட் டுமே சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும். அதேநேரம் தலைமைத் துவத்திலும் மாற்றங்கள் ஏற் படுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


தலைமைத்துவங்கள் மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவை... Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.