தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்...
பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் நன்மை கருதி நாடளாவிய ரீதியில் மேலதிக போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்ட மிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமல் எஸ். குமாரவின் ஆலோசனைக்கமைய இன்று 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை மேலதிக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கும் மேலதிக போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தன்று தெற்கு அதிவேக பாதை ஊடாக மேலதிகமாக சில சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு நகர மண்டபம் மற்றும் கடுவெலயில் இருந்து காலி - மாத்தறை வரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சொகுசு பஸ்கள் இணைந்த சேவையை முன்னெடுப் பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment