கலாமின் சொத்து விபரம் எவ்வளவு? : உதவியாளர் பொன்ராஜ் தகவல்
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தெரிவித்துள்ளதாவது,

அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.
கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? அவரது இறுதி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு ஓய்வூதி பணம் வந்து கொண்டிருந்தது.
கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன.
கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.
ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.
கலாமின் சொத்து விபரம் எவ்வளவு? : உதவியாளர் பொன்ராஜ் தகவல்
Reviewed by Author
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment