ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் சிவசக்தி ஆனந்தன் முறையீடு
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் அரசு சார்புடைய கட்சிகளின் இலஞ்சம் மற்றும் கையூட்டு வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் சிவசக்தி ஆனந்தன் முறையிட்டுள்ளார்.
நீண்ட கால கண்காணிப்பாளர் ஒலிவர் கிறின் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் குறித்த முறைப்பாட்டினை அளித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் சிவசக்தி ஆனந்தன் முறையீடு
Reviewed by Author
on
August 07, 2015
Rating:

No comments:
Post a Comment