தங்களது 22 வருட சாதனையை முறியடித்த இந்தியா
இலங்கைக்கு மற்றும் இந்தியாவுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இந்தியா அணி சார்பில் கோலி மற்றும் தாவன் ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 227 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 1993 ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கைக்கு எதிராக சச்சின் டெண்டுல்கருடுடன் வினோத் கம்ளி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக பெற்ற 162 இணைப்பாட்டத்தை அவர்கள் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது வரை இந்திய அணி 264 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அவ்வணி சார்பில் ஷிகர் தாவன் ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, அவ்வணியின் தலைவர் விராத் கோலி 103 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது 22 வருட சாதனையை முறியடித்த இந்தியா
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment