இன்று நள்ளிரவுக்கு பின்னர் பிரசாரங்களில ஈடுபட்டால் கைது செய்யப்படுவர்..!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டில் அமைதியான நிலமைகள் தொடர்வதற்கு தற்போது பொலிஸ் விசேட படையணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன.
அத்துடன், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இன்று நடத்தும் பேரணிகளில் ஒன்றை நள்ளிரவு 12 மணிவரையில் நடத்திச் செல்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக தேர்தல் பிரசார கூட்டங்களை இரவு 10 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும்.
இன்று நள்ளிரவுக்கு பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் தரப்பினரை கைது செய்ய நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவுக்கு பின்னர் பிரசாரங்களில ஈடுபட்டால் கைது செய்யப்படுவர்..!
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment