அண்மைய செய்திகள்

recent
-

48 மணித்தியாலங்களில் சட்டவிதிகளை மீறக் கூடாது ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
தேர்தல் பிரசாரங்கள் 14 நள்ளிரவுடன் நிறைவு:

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்ற இறுதி 48 மணித்தி யாலங்களில் தேர்தல் சட்டங்களை மிக உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களில் தேர்தல் தொடர்புபட்ட நேர்காணல்களோ செய்திகளோ கட்டுரைகளோ அல்லது விளம்பரங்களோ பிரசுரமாகாத வகையில் பார்த்துக் கொள்வது ஊடக நிறுவனங்களின் பொறுப்பு என தெரிவித்த அவர், தேர்தல் சட்டங்களை அலட்சியப்படுத்துவோர் தொடர்பில தாம் முறையாகச் செயற்படப்போவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கிலிருந்து செயற்படும் ஊடக நிறுவனங்கள் உட்பட அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் நேற்றைய தினமே அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது முக்கியமென்றும் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே தேர்தல் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார். பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். மொகமட், தகவல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொகமட் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரி விக்கையில்,

இம்முறை தேர்தல் திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ளதால் ஞாயிறு எந்தவொரு ஊடகத்திலும் தேர்தல் சம்பந்தமாகவோ அல்லது வாக்காளர்களை தூண்டுவதாகவோ எந்தவொரு செய்தியோ கட்டுரையோ விளம்பரங்களோ வெளிவரக் கூடாது.

வாராந்த பத்திரிகைகள் பெரும் பாலும் பத்திரிகை ஸ்டோல்களிலன்றி நேரடியாகவே வழங்கப்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு வெள்ளிக் கிழமைகளில் அச்சிடப்படும் வாராந்த பத்திரிகைகளை வியாழக்கிழமையே அச்சிட்டு சனிக்கிழமையாகும் போது அதன் விற்பனை நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என்ற ஆலோசனையையும் முன்வைத்தார்.

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படப் போவதில்லை என கட்சிகளின் தலை வர்களும் ஊடகவியலாளர்களும் பாரா ளுமன்றத்துக்கூடாக எமக்கு வாக்குறுதி யளித்துள்ளனர்.

இந்த வாக்குறுதி முறையாக நடை முறைப்படுத்தப்படுவது முக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  

48 மணித்தியாலங்களில் சட்டவிதிகளை மீறக் கூடாது ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்... Reviewed by Author on August 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.