மன்னார் வங்காலையில் இரு யுவதிகளை கொடூரமாக வெட்டி படுகாயமடையச் செய்த ஆசிரியர் (அதிர்ச்சித்தகவல்)vankalai-news
Eவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இரு யுவதிகளை கொடூரமாக வெட்டி படுகாயமடையச் செய்த சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை(8) காலை மன்னார் வங்காலை 02 ஆம் வட்டாரத்தில் இடம் பெற்றுள்ளது.
இக் கொடூரச் செயலினால் வங்காலை கிராம மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகயில்,,,
மன்னார் வங்காலை 2 ஆம் வட்டாரத்தில் உள்ள செல்வராஜ் ரெஜீனா குளாஸ் என்பவருடைய வீட்டிலேயே இக் கொடூரச் செயல் இடம் பெற்றுள்ளது.
வங்காலை 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரும்,மன்னாரில் உள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றுபவருமான குறித்த நபர் கடந்த சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் வங்காலை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வராஜ் ரெஜீனா குளாஸ் என்பவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
குறித்த வீட்டில் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் 26 மற்றும் 28 வயதுடைய இரு யுவதிகள் இருந்துள்ளனர்.இதன் போது குறித்த நபர் கொண்டு சென்ற கத்தியினால் குறித்த இரு யுவதிகளையும் சரமாறியாக வெட்டியுள்ளார்.
பின் தனது கழுத்தை தானே வெட்டியுள்ளார்.இந்த நிலையில் மூவரும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குறித்த மூவரும் காப்பற்றப்பட்டுள்ளனர்.
குறித்த இரு யுவதிகளின் முகம்,கை,கழுத்துப்பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்படுகின்றது.
ஏன் குறித்த யுவதிகள் இருவரையும் குறித்த நபர் வெட்டினார் என்ற விடையம் தெரியவில்லை.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் வங்காலையில் இரு யுவதிகளை கொடூரமாக வெட்டி படுகாயமடையச் செய்த ஆசிரியர்
(அதிர்ச்சித்தகவல்)vankalai-news
Reviewed by Admin
on
August 12, 2015
Rating:

No comments:
Post a Comment