மலையக மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர் :திகாம்பரம்,,,
மலையக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களைப் போல யாரும் மக்களை ஏமாற்ற முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மலையக மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம், ஏழு பேர்ச் காணி, கல்வி அபிவிருத்தி போன்ற சமூக நலத் திட்டங்கள் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்,
மலையக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களைப் போல யாரும் மக்களை ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மலையக மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம், ஏழு பேர்ச் காணி, கல்வி அபிவிருத்தி போன்ற சமூக நலத் திட்டங்கள் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு பேசுவதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு கம்பனிகள் அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு தற்போது நேரமில்லை என்று கூறி விட்டதாகவும் வேட்பாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதை நம்ப முடியுமா?
தேர்தல் காலத்தில் இவ்வாறு எதையும் செய்ய முடியாது என்பதற்காகவே கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்தை மாத்திரம் அழைப்பார்களா? கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை? கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்க அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தையை ஒரு தொழிற்சங்கத்துடன் மாத்திரம் பேசுவதற்கு கம்பனிகளோ அல்லது முதலாளிமார் சம்மேளனமோ முன்வருமா?
ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதாக அன்றும் இன்றும் கூறி வருகின்ற கூற்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி என்றும் தடையாக நிற்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால், சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கம்பனிகள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறுவது தேர்தல் நேரத்தில் வெற்றிலை சின்னத்துக்கு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்று வித்தையாகும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வரும்போது மேலும் அவர்களை ஏமாற்ற பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுவதை நம்பி மேலும் மோசம் போய்விடக் கூடாது என்றார்.
மலையக மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர் :திகாம்பரம்,,,
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment