அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! அனந்தி சசிதரன்...


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கேட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அனந்தி பேசுகையில்:

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும்.

தமிழ் மக்களுடைய அபிலாஷைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.

தேர்தல் போட்டியிடும் ஏனைய சில தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு போட்டியிடுகின்றன.

தமிழ் தேசியவாதிகள் என காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை சின்னாபின்னப்படுத்தி தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடுவதற்கு அவை செயற்படுகின்றன.

இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லையென்பது வெள்ளிடைமலை.

இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த மாத்திரமே உதவும். எனவே இவர்களைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடையின்றி முன்னேறுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்டாயம் வாக்களித்து ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! அனந்தி சசிதரன்... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.