615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு...
பொதுத் தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் மற்றும் கைகலப்புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்கப்படும் பிரதான 615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீதம் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தேவையேற்பட்டால் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கலகங்கள் அடக்கும் 165 குழுக்கள் தேர்தல் தினத்திற்கு முன்பும் தேர்தல் தினத்தன்றும், அதற்கு பின்னரும் ஆயத்தமான நிலையில் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment