ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்...

நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றினை மஹிந்த ராஜபக்ஷ இன்று அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன்னர் மக்கள் ஆணைக்கு அமைவாக நான் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினேன். அத்துடன் சில தினங்களுக்குப் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தது உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானமாகும்.
நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment