அண்மைய செய்திகள்

recent
-

சம்பூரில் மைத்திரிபால-சந்திரிகா-சம்பந்தன் கூட்டணி பேசியது என்ன?...


திருகோணமலை சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசத்தில் நடைபெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரிபால-சந்திரிகா-சம்பந்தன் கூட்டணி பேசியது என்ன? அவர்கள் நீண்ட நேரமாக மேடையில் என்ன பேசினார்கள் என்ற கேள்வி பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் அவர்களுக்கு இடையிலான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.

குறிப்பாக சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தை இந்த மூவரும் இணைந்தே நிறைவேற்றியுள்ளதாக கூறப்படகின்றது. அந்த வகையில் அவர்கள் மூவரின் பேச்சு என்பது எதிர்காலத்தில் வடகிழக்கு மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமென்றே நம்பப்படுகின்றது.

வரலாற்றில் முதல் தடவையாக இரா.சம்பந்தன் அவர்களின் இணக்க அரசியல் முயற்சியானது சம்பூர் பிரதேசத்தை மீட்டுக்கொடுத்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்களின் வகிபாகம் தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையுமென கூறப்படுகின்றது.

அதாவது தமிழர் பிரச்சினையில் மைத்திரிபால-சந்திரிகா-சம்பந்தன் ஆகியோரின் உறவு மிகவும் முக்கியத்துவம் வய்ந்ததாக கருதப்படுகின்றது.

தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்துவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் இந்த இணக்க அரசியல் மூலமாக எதிர்காலத்தில் வடகிழக்கு தமிழர் பிரச்சினையில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக சம்பந்தன் அவர்களின் சம்பூர் உரையானது தமிழர் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. அதாவது மீண்டுமொருமுறை தமிழர்கள் ஒரு தனியான தேசிய இனம் அவர்களது தாயகம் வடகிழக்கு அவர்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார்.

சம்பந்தன் அவர்களின் உரையானது அங்கு வருகைதந்திருந்த அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது.

இலங்கையின் குட்டி அரசாங்கமே கூடிநின்ற அந்த பூமியில் யுத்த அவலங்களை தாங்கிநின்ற சம்பூர் மண்ணில் வைத்து மீண்டுமொருமுறை தமிழர்கள் இலங்கையில் ஒரு தனிஇனம் அவர்களுக்கென தனியான வடகிழக்கு தாயகம் உண்டு அவர்கள் அந்த மண்ணில் முழு உரிமையுடனும் வாழவதற்கு தகுதியுடையவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும் காலங்கள் கடந்தாலும் உரிமைகளை பெறும் வரை எமது போராட்டம் தொடரும் என்பதை ஆணித்தனமாக அவர் கூறியிருக்கின்றார்.

சம்பூரின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் வெற்றியென்றே அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். உண்மையில் இந்த வெற்றி தொடரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதாவது மைத்திரிபால-சந்திரிகா-சம்பந்தன்-ரணில் ஆகியோரின் கூட்டணி நிச்சயம் தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமென தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இதன் ஆரம்பமே சம்பூர் மீள்குடியேற்றம்.

தொடர்புடைய செய்தி- பிரச்சினைகளுக்கு சமாதானமாக தீர்வைக் காண விரும்புகிறோம்: சம்பூரில் சம்பந்தன் உரை.

சம்பூரில் மைத்திரிபால-சந்திரிகா-சம்பந்தன் கூட்டணி பேசியது என்ன?... Reviewed by Author on August 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.