தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில், கதிர்காமதம்பி துரைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இருவரின் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.
இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற தமிழ் அரசுக் கட்சி,
யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங்களையும், வன்னியில் 4 ஆசனங்களையும் மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும் அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா 1 ஆசனத்தையும் பெற்று இருந்தது.
14 ஆசனங்களை தன் வசப்படுத்திய தமிழ் அரசுக் கட்சிக்கு மேலதிகமாக 2 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றுள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment