அண்மைய செய்திகள்

recent
-

ஆசஸ் தொடர் தோல்வியோடு ஓய்வை அறிவித்தார் கிளார்க்...


ஆசஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய
அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தனது ஓய்வை அறிவித் துள்ளார்.
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே போர் போல் நடக்கும் ஆ'ஸ் தொடரில் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி மோச மாக விளையாடி வருகிறது.

இதில் தற்போது முடிந்த 4வது டெஸ்ட் போட்டி யில் யாரும் எதிர்பாராத விதமாக படுமோசமாக விளையாடிய அவுஸ்திரேலியா 60 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேலும், இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்துள்ளது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக ஐந்தாவது ஆ'ஸ் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறார் கிளார்க். இது தொடர்பான அறி விப்பை கடந்த சனிக்கிழமை அவர் அறிவித்தார்.

தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிளார்க் கூறியதாவது:

இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடு வேன். அதுதான் எனது கடைசி கிரிக்கெட் போட்டி யாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். ஓவல் மைதானத்தில் எனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட விரும்பு கிறேன். இனி என்னை வெளியேறுமாறு நீங்கள் கூற முடியாது. கடந்த 12 மாதங்களாக எனது ஆட்டத்தில் எனக்கே திருப்தி இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் என்றால் அது ஆ'ஸ் தான். எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்த முயன்றோம். நிச்சயமாக எனது திறமையை வெளிப்படுத்த முயன்றேன். ஆனால், நாங்கள் தோல்வியடைந்து விட் டோம். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். வெள்ளிக்கிழமை இரவு ஓய்வு அறைக்கு சென்றவுடன் நான் இந்த முடிவை எடுத் தேன். கிரிக்கெட்டில் எல்லாவற்றிற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். எண்ணற்ற நினைவு களுடன் இங்கிருந்து செல்வேன்" என்று உருக்கமாக கூறினார்.

34 வயதான கிளார்க், கடந்த 2004ஆம் ஆண்டு பெங்க@ரில் நடந்த இந்தியாவுட னான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 114 டெஸ்ட் போட்டியில் விளை யாடியுள்ள அவர், 28 சதங்களுடன் 8,628 ஓட்டங்கள் குவித்துள்ளார். ரிக்கி பொன்டிங் கிற்குப் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அணியின் தலைவ ராக இருந்து வருகிறார். ஒரு நாள் மற்றும் இருபது-20 போட்டிகளில் கிளார்க் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசஸ் தொடர் தோல்வியோடு ஓய்வை அறிவித்தார் கிளார்க்... Reviewed by Author on August 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.