அண்மைய செய்திகள்

recent
-

68 வீதமானோரே சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்...


தேர்தலில் போட்டியிடும் 6151 வேட்பாளர்களில் 1483 பேரே தங்களது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (03) தெரிவித்தார். இது தேர்தலில் போட்டியிடுவோரில் 68% ஆகும் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு வெளியிட்டுள்ள வேட்பாளர்களில் 261 பேர் ஜே.வி., 232 பேர் ஐ.தே.க, 220 பேர் ஐ.ம.சு.மு.வைச் சேர்ந்தவர்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சில வேட்பாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாகனத்தை மீள வழங்காமை குறித்து உரிய கட்சியின்பிரதிகள் கவனம் எடுக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

உரிய அமைச்சில் கட்டணத்தை செலுத்திய அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்கள் மாத்திரமே தங்களது உத்தியோகபூர்வ வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
68 வீதமானோரே சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்... Reviewed by Author on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.