ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்தி புரட்சிகர சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை
ரோபோ உபகரணங்க ளைப் பயன்படுத்தி இரு சகோதரிகளுக்கு அவர்களது இனவிருத்தி உறுப்பினூடாக சிறு நீரகமாற்று அறுவைச்சிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இத்தகைய அறுவைச்சிகிச்சையொன்று உலகில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
தோலவுஸ் நகரிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவைச்சிகிச்சையின் போது சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான பீற்றைஸ் பெரஸ் (43 வயது) என்ற பெண்ணுக்கு அவரது சகோதரியான வலேரி பெரெஸால் (44 வயது) தானமாக வழங்கப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இதன்போது சகோதரிகள் இருவருக்கும் ஒரேசமயத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வலேரியின் உடலிலிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக பீற்றைஸுக்கு பொருத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்கு மறுநாள் வலேரி வீடு திரும்பியுள்ளார். அதேசமயம் பீற்றைஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 3 நாட்களில் வீடு திரும்பியுள்ளார்.
ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்தி புரட்சிகர சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment