புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் பரகுவே அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வ சந்திப்பு...
தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் 80 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களது தலைமையில் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், அனைத்துலக மக்களவையின் சர்வதேச தொடர்பாளர் திருச்சோதி ஆகியோர் இச்சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம் 13 இலட்சங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இசந்திப்பு இடம்பெற்றுள்ளது.


புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் பரகுவே அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வ சந்திப்பு...
Reviewed by Author
on
August 21, 2015
Rating:

No comments:
Post a Comment