மடு அன்னையில் ஆவனித்திருவிழா(Photos)
மன்னார் மடு திருத்தளத்தின் ஆவனி மாத திருவிழா இன்று(15) சனிக்கிழமை காலை 6.30க்கு பாப்பரசரின் இலங்கைக்கான துதுவர் பேராயர் நியுயான் வன் டெட் ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.
பாப்பரசரின் இலங்கைக்கான துதுவர் பேராயர் நியுயான் வன் டெட் ஆண்டகை தலைமையில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெணாண்டோ,குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெனால் அன்ரன் பெரேரா,காலி மறைமாவட்ட ஆயர் றோமன் விக்கிரமசிங்க,ஓய்வு பெற்ற திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கின்சிலி சுவாமி பிள்ளை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,இலத்தீன் ஆகிய நான்கு மொழிகளிலும் விசேடமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும் ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் பல பாகங்களில் இருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் மடுத்திருத்தளத்திற்கு வருகை தந்திருந்தனர்.
பக்தர்களின் நலன் கருதி மதவாச்சியில் இருந்து மடுவிற்கு விசேட புகையிரத சேவைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மடு அன்னையில் ஆவனித்திருவிழா(Photos)
Reviewed by Admin
on
August 15, 2015
Rating:

No comments:
Post a Comment