அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மின்சார சபையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம். -Photos

மன்னார் மின்சாரசபையை முற்றுகையிட்டு மன்னார் நகர் மக்கள் இன்று புதன் கிழமை(19) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

-இச்சம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,,

-மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பகல் இரவு பாராது  மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருகின்றது.

-இவ்விடையம் தொடர்பாக மன்னார் மக்கள் மன்னார் மின்சார சபையுடன் தொடர்புகளை ஏற்படுத்துகின்ற போதும் அங்குள்ள அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை.

-தற்போது தொடர்ச்சியாக மன்னாரில் மின் தடை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோபமடைந்த மன்னார் மக்கள் இன்று புதன் கிழமை(19) மதியம் ஒன்று திரண்டு மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள மன்னார் மின்சார சபையை முற்றுகையிட்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் பெற்றோர்,வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.குறிப்பாக இவ்வருடம் உயர் தரப்பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களும் குறித்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த முற்றுகை போராட்டத்தின் போது மன்னாரில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதனை தெழிவு படுத்த வேண்டும் எனவும் அடிக்கடி தடைப்படுகின்ற மின்சாரத்தை சீரான முறையில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

-இதன் போது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மின் அத்தியகட்சகருடன் மின்சார தடை சம்பந்தமாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது மன்னாரில் மின் தடை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வழியுருத்தப்பட்டதோடு பாதீக்கபட்ட மக்கள் தமது அதிருப்தியையும் முன்வைத்தனர்.

இதனை கேட்டுக் கொண்ட மன்னார் மின் அத்தியகட்சகர் விரைவில் மின் தடை ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்ததோடு மன்னரில் உள்ள சில அதியுயர் மின் கோபுரங்களில் உள்ள மின் வயரில் உப்புக்கசிவு ஏற்படுவதன் காரணத்தினாலேயே குறித்த  மின் தடங்கள்  ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   





மன்னார் மின்சார சபையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம். -Photos Reviewed by Admin on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.