அண்மைய செய்திகள்

recent
-

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்! 879 நாட்கள் இருந்து சாதனை...


சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் கென்னடி படல்கா(Gennady Padalka), கசாக் விண்வெளி வீரர் ஐட்யன் அமெடெவ்(Aidyn Aimbetov) மற்றும் டேனிஷ் விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ்(Andreas Mogensen) இவர்களே திட்டமிட்டபடி இன்று கசாக் புல்வெளியில் தரையிறங்கினர்.

கென்னடி படால்கா 879 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து விண்வெளியில்அதிக நாள் இருந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

படல்கா 5 வெவ்வேறான பயணங்களின் மூலம் விண்வெளியில் 879 நாட்கள் இருந்து உள்ளார்.

இதற்கு முன் ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கிரிகேலேவ் (Sergei Krikalev) என்பவர், 803 நாட்கள் 9 மணி நேரம் 41 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரஷ்ய வெண்வெளி ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ரோஸ்கோச்மோஸ்(Roscosmos) கூறுகையில், தெரிவு செய்யப்பட்ட இடத்தில் இறங்கி உள்ளனர், எல்லாம் நல்லவிதமாக நடந்து உள்ளது என தெரிவித்துள்ளார்.


பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்! 879 நாட்கள் இருந்து சாதனை... Reviewed by Author on September 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.