அண்மைய செய்திகள்

recent
-

அதிநவீன தொழில்நுட்பத்தை மிஞ்சும் முன்னோர்களின் “சுனாமி எச்சரிக்கை கல்”...


ஜப்பானில் சுனாமியிலிருந்து தங்கள் சந்ததிகளை பாதுகாக்க ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பு பதிவை விட்டுச் சென்றுள்ளனர் முன்னோர்கள்.
ஜப்பானிய முன்னோர்கள் அடிக்கடி அங்கு ஏற்படும் சுனாமியிலிருந்து தங்களின் சந்ததிகளை பாதுகாக்க, நல்ல யோசனையாக நூற்றுக்கணக்கான நடுக்கல்களை குறிப்பு பதிவுடன் விட்டுச் சென்றிருக்கிறார்கள், அவை சுனாமி கற்கள் என்றே அழைக்கப்படுகிறது.

அவர்களுடைய இந்த தொலைநோக்கு அறிவு, ஆச்சரியத்தையும் தங்கள் சந்ததியினர் மீது இருந்த அக்கறையையும் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த வாசிப்பு கற்கள், காடுகள் மற்றும் உயரமான மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லிலும் வெவ்வேறு விதமான செய்திகளும் உள்ளன. அவை சுனாமி, பூகம்ப எச்சரிக்கையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் கடற்கரை ஒட்டிய அனியோசி என்ற கிராமத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு கல்லில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

”இந்த கல்லின் உயரத்தை அளவீடாக கொண்டு வீடுகளை கட்டுங்கள். இதற்கு கீழான அளவில் வீடுகளை அமைக்காதீர்கள். அடிக்கடி வரும் சுனாமி, பேரிடர்களை நினைவில் கொண்டு சேதமில்லாமல் அமைதியாக வாழ இதுவே சரியான வழி”. என்று உள்ளது.

இதில் குறிப்பிட்டுள்ளது போலவே 11 வீடுகளைக்கொண்ட சுனாமி தாக்காத சிறு கிராமத்தையும் வைத்திருந்துள்ளனர்.

ஜப்பானில் பெரிய சுனாமி ஏற்பட்டு கடற்கரையில் 100 மைல்களுக்கு அதன் தாக்கம் இருந்த போதும், அது ஜப்பான் வரலாற்றில் மிகப்பெரிய சுனாமியாக பதிவாகியிருந்த போதும், முன்னோர்கள் வைத்த சுனாமி கல்லுக்கு 300 அடிகள் கீழாகவே சுனாமி தன்னை திருப்பிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கற்கள் 6 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களால் வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிகிறது.

ஜப்பானின் கடற்கரையில், 1960 ல் நல்ல தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவர் கூட, சுனாமியிலிருந்து கடற்கரை நகரங்களை பாதுகாப்பதில் தவறி இருக்கிறது.

ஆனால், முன்னோர்கள் அனுமானித்து நிறுத்திய கல் இன்றுவரை சுனாமியால் தொடக்கூட முடியாத சரியான தீர்வாக இருக்கிறது. இது ஜப்பானியர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து பெருமைப்பட வைத்துள்ளது.

சில இடங்களில் ஒருவருடைய வாழ்நாளில் ஓரிரு முறை நடக்கும் சுனாமி. ஜப்பானில், ஒரு மாதத்தில் 9 முறை கூட ஏற்பட்டுள்ளது.

கேசன்னுமா என்ற கடற்கரை நகரில் உள்ள ஒரு வாசிப்பு கல்லில் ”இங்கு சுனாமி எப்போதும் வரலாம். அகவே, மதிப்பான உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள தயாராகுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா காலகட்டங்களிலுமே அங்கு வாழ்பவர்களுக்கு பூகம்பம் சுனாமி பற்றிய விழிப்புணர்வு அறிவு இருந்துதான் வருகிறது. ஆனாலும், இவை ஏற்பட்டால், ஓரிரு நிமிடங்கள் கூட தப்பிக்க கால அவகாசம் இருப்பதில்லை அதுவும் மக்கள் தினசரி வேலைகளில் ஆழ்ந்திருப்பதால் மீள்வது கடினமாகிவிடுறது.

பூகம்பத்தை சமாளிக்கவே கற்களால் கட்டும் பெரிய வீடுகளை பழங்காலத்திலிருந்து ஜப்பானியர் தவிர்த்து வந்துள்ளனர்.

சுனாமி இன்றளவும் அவர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. ஜப்பானிய அரசும் முன்னோர்கள் கல்லை அவ்வளவாக பொருட்படுத்தாததற்கு காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி மீது கொண்ட நம்பிக்கை மற்றும் எல்லா வீடுகளையும் கல்லில் குறிப்பிட்டுள்ளது போல அவ்வளவு உயரத்தில் கட்டுவதும் சாத்தியமில்லை என்பதும்தான்.

பால்வீதியில் ஏற்படும் மாற்றங்களையே கண்டுபிடித்தாலும். நாம் பக்கத்தில் நின்று ரசிக்கும் கடலலை, சுனாமியாய் சீற்றங்கொள்ளும்போது அதன் ஆளுமை ஜப்பானை மட்டுமல்ல சகல நாடுகளையுமே அச்சுறுத்துகிறது.




அதிநவீன தொழில்நுட்பத்தை மிஞ்சும் முன்னோர்களின் “சுனாமி எச்சரிக்கை கல்”... Reviewed by Author on September 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.