அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது...


ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம், சர்வதேச விசாரணை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் ஐந்தாவது நாளான இன்று யாழப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
 கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் அன்றையதினம் மாலை ஆனையிறவை வந்தடைந்தது.
  
ஆனையிறவிலிருந்து இரண்டாம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (11) பளையை வந்தடைந்தது. மூன்றாம் நாள் நடைபணம் வெள்ளிக்கிழமை (11) பளையிலிருந்து ஆரம்பித்து கொடிகாமத்தை வந்தடைந்தது.

கொடிகாமத்திலிருந்து நேற்று ஆரம்பித்த நடைபயணம் நேற்று கைதடியைச் சென்றடைந்து.

இந்நிலையில் இன்றைய தினம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் யாழ் நகரைச் சென்றடைந்துள்ளது.

இந்த நடைபயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது... Reviewed by Author on September 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.