வருடத்துக்கு 20 மில்லியன் பாலியல் ஊக்க மாத்திரைகள் விற்பனை...
நாட்டில் வருடமொன்றுக்கு 20 மில்லியன் பாலியல் ஊக்க மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஒளடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இந்த மாத்திரகைள் வைத்தியர்களின் எவ்வித ஆலோசனையும் இன்றி தாதே வாங்கி பாவிப்பதாகவும் வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு நிகராக இந்த பாலியல் ஊக்க மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆபத்தான ஒளடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தலைவர் சமிர நிலங்க தெரிவித்துள்ளார்.
பாலியல் ஊக்க மாத்திரைகளை கூடுலதாக பாவிப்பதால் பக்க விளைவுகளும் உயிரிழப்புக்களும் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்று முன்னதினம் மாரவில – மூதுகட்டுவ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் தங்கியிருந்த 52 வயதுடைய ஆண் திடீரென சுகவீனமுற்று மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அணிந்திருந்த காற்சட்டையில் பாலியல் சக்தியை அதிகரிக்கும் மருந்து ஒன்றில் வெற்று பொதி இருந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வருடத்துக்கு 20 மில்லியன் பாலியல் ஊக்க மாத்திரைகள் விற்பனை...
Reviewed by Author
on
September 14, 2015
Rating:

No comments:
Post a Comment