மன்னாரில் பொது நூலகம் இருக்கின்றதா.???....
இலங்கையில் அதிக வெப்பமானதும் பின்தங்கிய மாவட்டமாக மன்னாhர் காணப்படுகின்றது கருதப்படகின்றது பல காரணகாரியங்கள் உள்ளது குறிப்பாக மன்னார் மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்கள் புறக்கணித்து விடுகின்றது தள்ளி வைக்கின்றார்கள் என்றால் மன்னாரில் வசிக்கும் மன்னார் வாசிகளே மன்னாருக்கு கொள்ளி வைக்கின்றார்கள் என்பதே உண்மையிலும் உண்மை……
இங்கே எடுத்து காட்ட பல விடயங்கள் உள்ளது ஏன் என்றால் எதுதான் ஒழுங்காக பொதுத்தன்மையுடன் சிறப்பாக இயங்குகின்றது…ஏனோ தானோ என்று கடமைக்குத்தான் இயங்கிக்கொண்டு இருக்கின்றது இங்கே உங்களோடு பேச இருப்பது ...மன்னார் பொது நூலகம்
மன்னார் பொது நூலகம்------
மன்னார் பொது நூலகம் அமைந்துள்ள இடம் தனியார் பேரூந்து நிலையம் அரசபேரூந்து நிலையம் கச்சேரி-கடைத்தொகுதிக்கு மத்தியிலும் தந்தை செல்வா சிலையின் பின்பக்கமாக தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் சிலையோடு அமைந்திருப்பது யாவருக்கும் தெரிந்த விடையமே….
பார்த்தவுடன் நூலகம் என்று தெரிகின்றதா…..?
நூலக வளாகத்தினுள் இருக்கின்ற சிறப்பான விடையங்களைப்பாருங்கள்……
• முச்சக்கர வண்டித்தரிப்பிடம்
• துவிச்சக்கர வண்டித்தரிப்பிடம்
• சினிமா விளம்பரப்பலகை
• ஏனைய அழகு வியாபார விளம்பரப்பலகைகள்
• மத்திய சுற்றாடல் துறை அமைச்சுத்திணைக்களம்
• பிரஜைகள் குழு அலுவலகம்
இவற்றோடு கழுதைகள் மாடுகள் நாய்கள் அத்துடன் கழிவுப்பொருட்கள் சேரும் இடமாகவும் காட்சியளிக்கின்றது மன்னார் பொது நூலகம்.
கோயிலுக்கு போகும் போது பாதணிகளை களற்றிவிட்டுத்தாதேன போகின்றோம் ஏன் அவ்விடம் புனிதமானது என்பதற்காகத்தானே… அப்படியானால் பொது நூலகம் என்ன பொது மலசலகூடமா…
இவ்வாறு கிடப்பதற்கு நூலகவளாகத்தினுள் இருக்கும் இந்த சிறப்பான விடையங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் இடைஞ்சலாகவும் இடையுறாகவுமே உள்ளது எப்படியென்றால்….
பிரஜைகள் குழு திணைக்களத்திற்கு வரும் மக்கள் யுத்தத்தால் தாம் இழந்த உறவுகளை பற்றிய தகவல்களை குறைகளை பதிவு செய்யவும் போராட்டங்களை முன்னெடுக்கவரும் போது அவர்கள் புலனாய்வு அதிகாரிகளினால் நூலகவளாகத்தினுள் வைத்தே விசாரனைக்கு உட்படுத்தப்படகிறார்கள் இதனால் அங்கு வரும் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் பயமிகுதியால் பொது நூலகத்தினை பயன்படுத்த முடியாமல் போகின்றது. அதுபோலவே முச்சக்கரவண்டித்தரிப்பிடமும் சினிமா ஏனைய விளம்பரப்பலகைகளும் படிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு வருகின்ற மாணவசமூதாயத்தினை வேறு சிந்தனைகள் வேறுவழிகளில் கொண்டு செல்லும் அளவிற்கு அல்லவா இருக்கின்றது நூலகங்களுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு தேவையில்லாத பகிடிகள் சொற்பிரயோகங்கள் கையாளப்படுவதை இயல்பாகவே காணப்படுகின்றது இவ்வாறு இருந்தால் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள்….?
நூலகத்திற்குள் வருவோம்….
நூலகமானது----
• சிறுவர் பகுதி
• மாணவர் பகுதி
• இரவல் பகுதி
• ஆராச்சி உசார்த்துணைப்பகுதி
• பொது நிலையினர்
• கணனிப்பகுதி
பல பகுதிகள் கொண்டிருக்கவேண்டும் அத்தோடு மாணவர்கள் வாசிப்பு பகுதியும் தொழிநுட்பவசதிகளான போட்டோ கொப்பி ஸ்கானிங் கணனி மற்றும் இதர வசதிகள் இருக்கவேண்டும் இங்கு இருக்கின்றது ஆனால் இல்லை இருந்தும் பயனில்லை அத்தோடு மலசலகூடம் பூட்டிய நிலையிலேயே உள்ளது திறந்திருந்தாலும் பாவிக்க முடியாத நிலை குடிநீர் வசதி இல்லை இருப்பதும் குடிக்கமுடியாத நிலை…
பொது நிலையினர் பகுதியை எடுத்துக்கொள்வோம் பொதுநிலையினர் எனும் போது படித்தவர்கள் படிக்காதாவர்கள் சிறியவர் பெரியவர் குடிகாரர் சகலரும் அடங்குவர் ஆதலால் இப்பகுதி நூலகத்தினுல் தனியாக இருக்கவேண்டும்
அது போல மாணவர்பகுதியும் மாணவர்பகுதியல் மட்டுடன்றி சிறுவர்பகுதி இரவல் பகுதி உசார்த்துணைப் பகுதி என அத்தனை பகுதிகளில் இருக்கும் கதை-சிறுகதை-நாவல்-அறிவியல் நூல்கள் தத்துவநூல்கள் ஆராச்சி நூல்கள் சிறுவருக்கான நூல்கள் அத்தனையுமே பழையவை கிட்டத்தட்ட பாவித்து கைவிடப்பட்வை குறிப்பாக மாணவர்களுக்கு தேவையான கடந்தகால வினாவிடைப் பயிற்சி நூல்கள் பாடநூல்களும் பழையவைதான் தற்போது மாறிக்கொண்டிருக்கும் ஆட்சிமாற்றங்களுக்கு ஏற்ப புதிய புதிய பாடத்திட்டங்களும் பரீட்சை முறைகளும் மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மாணவர்கள் எல்லோராலும் விலைக்கு புத்தகங்களை வேண்டி கற்க முடியாது அப்படியான சூழலில் மாணவர்களின் தெரிவு நூலகம் தானே அப்படியாக வரும் மாணவர்களுக்கு ஏற்றால் போல் இந்த நூலகத்தில் நூல்கள் இருக்கிறதா என்றால்…. இல்லை இல்லவே இல்லை.....
ஏன் என்றால் இருப்பது கடந்த 5 வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களே அதுவும் பாவிக்கமடியாத நிலையில் தான் உள்ளது ஓரிரு நுல்கள் தான். மன்னாரில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் வீதம் அதிகமாகவுள்ள நிலையில் அவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு தேவையான உஷாத்துணை நூல்களை தேடி யாழ் நூலகம் கொழும்பு நூலகம் வவுனியா நூலகம் ஏனைய நூலகங்களை நாடிச்செல்லவேண்டிய அவல நிலைகள் இன்னும் தொடர்கின்றது…..
20-05-1963 முதல் 01-09-2015 இற்றை வரை 22.236 நூல்களும் 3755 அங்கத்தவர்களும் தான் உள்ளனர் என்றால் 52 வருடங்கள் கடந்தும் இதுதான் நிலை…
நூல்களை கொள்வனவு செய்யும் படிமுறையொன்று உள்ளது…
ஒரு நூலகத்திற்கு நூற்களை கொள்வனவு செய்யும் முன் நூலகத்திற்கு வழமையாக வருகின்ற வாசகர்களின் தேவையான நுல்களின் பெயர்களை பெற்றுக்கொள்ளுதல் அதேபோல மாணவர்களுக்கு தேவையான நூல்களின் பெயர்களை அந்தந்த பாடசாலை மாணவர்களிடமோ… ஆசிரியர்களிடமோ…. அதிபர்களிடமோ…. கேட்டு பட்டியல் படுத்த வேண்டும் அந்தப்படடியலின் பிரகாரம் தேவையானவற்றை தேவையான அளவு பெற்றுக்கொள்ளலாம். அப்போதுதான் அந்த நூல்களின் தேவை அதிகமானதாக இருக்கும் அதே வேளை அந்த நூல்களின் பலன் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் திறமையும் கல்வி வளர்ச்சியும் ஓங்கும் என்பதில் ஐயமில்லை அத்துடன் மன்னாரில் இருந்து வெளிவருகின்ற படைப்புகளை கொள்வனவு செய்தால் அக்கலைஞர்களுக்கு கௌரவம் அளிப்பதாகவும் இன்னும் பல கலைஞர்களை உருவாக ஊக்கமளிக்கும் செயலாகவும் இருக்கும் அல்லவா… இவற்றையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ள ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர்வட்டம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் மன்னார் பொது நூலகத்தில் இருக்கின்றதா….இருந்தால்…..!
நூல்களை கொள்வனவு செய்வதற்கென்றே வருடாவருடம் 2 1/2இரண்டரை இலட்சம் நிதி ஒதுக்கப்படகின்ற போதும் ஏன் நூல்கொள்வனவு செய்யப்படுவதில்லை அந்தப்பணம் எங்கே என்ன தேவைக்கு பயன்படுகின்றது….. பணம் எங்கே…..?
இதைப்போலவே மாகாணசபையிடமும் வருடாவருடம் தேவையான அளவிற்கு நூல்களை கேட்டுப்பெறலாம் அந்த வளத்தினையாவது பயண்படத்துகிறார்கள் என்றால் இல்லை ஏன் இந்த மந்த நிலை…இன்னும் விஷேடவிதமாக ஆசியா பவுண்டேஷன் வருடா வருடம் ஆங்கிலப்புத்தகங்களினை வழங்குகின்றது அது சும்மாதானே கிடந்து பழுதாய் போகிறதற்குப்பதிலாக நல்ல நல்ல தமிழ்ப்புத்தகங்களை பெறலாம் அதுவும் ஒரு முறை பெற்றார்கள் பின்பு அதற்கு ஈடானபணத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளார்கள் அந்தப்பணம் எங்கே… என்ன தேவைக்கு பயண்படுகின்றது…
அதுபோலவே முச்சக்கரவண்டித்தரிப்பிடத்திற்கும் பிரஜைகள் குழு திணைக்களம் மத்திய சுற்றாடல் திணைக்களம் மாதமாதம் பெறுகின்ற வாடகைப்பணமோ குத்தகைப்பணமோ பெற்றுக்கொண்டால் அந்தப்பணம் நூலகத்தின் தேவைக்கு பயண்படுகின்றதா….? அப்படியானால் என்ன அபிவிருத்தி….
மன்னார் பொது நூலகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள்------
• நூலகத்தினைச்சுற்றி மதில்கள் நன்கு உயர்த்தப்பட்டு அழகு படுத்தப்படவேண்டும்…
• நூலகவளாகத்தினுள் இருக்கின்ற முச்சக்கர வண்டித்தரிப்பிடம் பிரiஐகள்குழு அலுவலகம்-மத்திய சுற்றாடல் துறை அமைச்சு அலுவலகம் சினிமா விளம்பரப்பலகை ஏனைய விளம்பரப்பலகைகள் அத்தனையும் அகற்றப்படவேண்டும் (அவர்களுக்கு வேறு இடம் கொடுக்கலாம் நூலகவளாகத்தினுள் இவைதேவையில்லை.)
• நூலக வளாகத்தினுள் இருக்கும் பழைய கட்டிடத்தொகுதியினை இடித்து விட்டு புதிய நவின வசதிகளுடன் கூடிய வகையில் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் கல்விச்சமூகத்திற்கும் ஏற்ற வகையில் அமைத்துக்கொடுக்கவேண்டும்.
• வருடா வருடம் புதிய நுல்களை உடனுக்குடன் கொள்வனவு செய்வதோடு நீண்டகாலப்பாவனைக்கு ஏற்ற வகையில் அந்த நூல்களை சிறந்த முறையில் பைண்டிங் செய்தல்.
• மன்னார் மாவட்ட கலைப்படைப்புக்கள் கண்டுபிடிப்புக்கள் அத்தனைக்கும் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.
• வாசகர்வட்டம் உருவாக்கி வாசிப்பு மாதம் மற்றும் மாணவர்களுக்கான வாசிப்பு மற்றும் நூலககண்காட்சி இதர போட்டிகள் ஊக்குவிப்புகள் இடம் பெறவேண்டும்.
• நூலக வளாகத்தினுள் அமைந்திருக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் சிலையைப்போல மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பெரியார்களின் சான்றோர்களின் சிலைகளை நிறுவலாம்.
• சிறுவர்களுக்கான கலைப்பூங்கா அமைத்தல்
• மாணவர்களுக்கு என்று கேட்போர்கூடமும் படிப்பதற்கு ஏற்ற கலைக்கூடமும் அமைக்கவேண்டும்.
• மன்னார் பொதுநூலகம் ஏனைய மாவட்டங்களுக்கு நிகரான நூலகமாக தரமுயர்த்தப்படவேண்டும். அதற்கு ஒவ்வொரு செயற்பாடுகளும் முறையாக அமைய வேண்டும். நிகழுமா….? நிகழவேண்டும்.
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் யுத்தகெடுபிடிகள் பெரிதாக இல்லை இடம்பெயர்வுகள் இருந்தாலும் ஆனால் வடக்கு எனும் போது எல்லோருக்கும் ஞாபகம் வருவது யாழ் நூலகம் தானே ஏன் என்றால் அந்த நூலகம் முற்றாக எரிப்பு சம்பவமும் அத்தோடு எத்தனை இடம்பெயர்வுகள் என எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் கல்வியின் மீது கொண்டுள்ள பற்றுதியால் அவர்கள் வீழ்ச்சி கண்டுள்ளார்களா இல்லையே… தயவு செய்து மன்னார் வாசிகளே ஒரு முறையேனும் யாழ் நூலகத்திற்கு சென்று வாருங்கள் எமது நூலகத்தின் நிலையை….. உணருவீர்கள்…
மன்னார் மாவட்டத்தில் இருக்கும் பொதுவான நூலகமே….
இப்படிக்கேவலமான நிலையில் இருக்கும் போது ஏனைய சிறு நூலகங்களை பற்றி சொல்லவா வேண்டும் இருந்தாலும் ஏளனமாக நினைத்துக்கொண்டிருந்த கிராமங்கள் விசுவாசத்தேடு கல்வியிலும் ஏன் எல்லாவற்றிலும் முன்னேறிவருகின்றார்கள் மன்னார் நகர வாசிகள் இன்னும் நரகத்தினுள்ளே தான் இருக்கின்றார்கள் தெரிந்தும் காரணம் பழகிவிட்டார்கள் மன்னார் மாவட்டத்தினுள் உள்ள நானாட்டான் பொது நூலகத்தோடு ஒப்பிடும் போதே மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது என்பதே…..!!!
நூலகப்பணியாளர்கள் எனும் போது
நூலகவியலாளர்கள்-2
நூலக உதவியாளர்கள்-2
பணியாளர்கள் -2
மேலதிக துப்பரவுபணியாளர்கள்-2 இவ்வாறு இருந்தும் பல நேரங்களில் நூலகம் மேலதிக துப்பரவு பணியாளர்கள் தான் நூலகவியலாளர்கள் போல் செயற்பட வேண்டியுள்ள நிலை நூலகப்பணியாளர்களுக்கு எந்த நுல் எங்கிருக்கிறது என்றும் என்னென்னநூல்கள் இருக்கின்றது. என்றும் தெரியாது கேட்டால் இலகுவாக இல்லையென்று ஒத்தை வார்த்தையில் பதில் வரும் அப்போது மன்னாருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பணயிகள் நூலகத்திற்கு வருகை தந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்களுக்கு தேவையான கையேடும் இங்கு இல்லை அவர்கள் கேட்கும் ஆங்கில கேள்விக்கு எப்படி சாதாரண துப்பரவு பணியாட்களாள் பதிலலிக்கமுடியும் அவ்வாறான சந்தர்பங்களில் மன்னார் பொது நூலகத்தின் தரமும் மன்னார் நிர்வாகமும் எப்படி….???
விவேகானந்தரின் விவேகமான வார்த்தை… ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது. எனும் தத்துவ வார்த்தையுள்ளது அந்த வார்த்தையின் தாற்பரியம் சிந்தியுங்கள் மன்னார் மண்ணின் மாணவர்கள் இளம்சமூதாயத்தினர் சீரழியவும் சமூதாயச்சீர்கேடுகளுக்கும் மறைமுகமாகவே நாம் தான் இருக்கின்றோம். முந்தைய காலங்களை விட பாடசாலை விடுமுறைகளிலும் சரி ஏனைய ஓய்வு நேரங்களிலும் சரி தற்போது மாணவர்கள் மாணவிகள் அதிகமாக நூலகங்களை பயண்படுத்த விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஏற்றால் போல் எல்லாவசதிகளும் இருக்கின்றதா… என்றால் இல்லை இதனால்தான் மாணவமாணவிகள் சிந்தனை செயல் நிலை மாறுகின்றது அதற்கு பொது நூலகத்தினுள் அமைந்திருக்கும் சிறப்பான விடையங்களும் நாமும் தான் முழுக்காரணிகளாக இருக்கின்றோம் என்பதுதான் உண்மை…
மன்னார் மக்களிடையே விழிப்புனர்வு என்பதே கிடையாது நமக்கென்ன என்றுதான் வாழ்கின்றார்கள். இளைஞர் யுவதிகளை எடுத்துக்கொண்டாலும் அவர்களும் கைத்தொலைபேசிக்குள் காலங்களை தொலைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சி எழுச்சி பற்றி யார் சிந்திக்கின்றார்கள் சற்றேனும் சிந்தியுங்களேன் மன்னார் மண்ணின் மைந்தர்களே;;;…
மன்னார் மாணவர்களின் கல்வியறிவில் பெரும் பங்கு வகிப்பது பாடசாலையும் பொது நூலகம் தானே உணருங்கள் உண்மையை உடனே இணையுங்கள் நன்மை தொடரட்டும்…...........
விழியில்லாதவன் தான் குழியில் விழ வேண்டும் விழிப்புணர்வு இருந்தால் குழியில் விழுபவனையும் நல் வழியில்…..
மன்னார் மன்னர்களே மறவாதீர்கள்… உறங்காதீர்கள்… விழித்திருங்கள்…
குறைகளை நிறைகளாக்குவோம்…….
மீண்டும் ஒன்று கொண்டு வருவேன்….
---கவிஞர் வை.கஜேந்திரன்---
மன்னாரில் பொது நூலகம் இருக்கின்றதா.???....
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:





No comments:
Post a Comment