ஐ.நா.அறிக்கையூடாக போர்க்குற்ற விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பெறமுடியும்...
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விசேட கலப்பு நீதிமன்றம் ஊடாக போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் அதேசமயம் இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுகாண வழிமுறைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கோப்பாய் கோமகன் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 56 ஆவது நினைவு தினம் நீர்வேலி வாழைக்குலை சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பல்வேறுபட்ட தியாகங்களினாலும் போராட்டங்களினாலும் உயிரிழப்புக்களினாலும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட எமது போராட்டம் கோப்பாய் கோமகன் அமரர் கு.வன்னியசிங்கம் போன்ற தியாகிகளால் 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
கோப்பாய் கோமகன் ஆரம்பித்து வைத்த தமிழ் தேசியம் தொடர்பான உணர்வு இந்த நிலைக்கு வந்துள்ளது. அவர் வடக்கையும் கிழக்கையும் சமமாக நோக்கினார். இரண்டு மாகாணங்களையும் உள்ளடக்கிய தமிழர் தாயகத்தை நேசித்தார். அவருடைய நிலையிலிருந்து நாங்களும் மாறமாட்டோம் என்றார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்கு நியமிக்கப்பட்ட குழுவினை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு இலங்கைக்கு உள்ளே பிரவேசிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆணைக்குழு உரிய முறையில் சாட்சியங்களை இலங்கைக்கு வெளியே இருந்து பதிவு செய்ததோடு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் உண்மை நிலையைக் கண்டு கொண்டு அறிக்கையைத் தயாரித்தது.
தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத மனித உரிமை அமர்வின்போது வெளியிடத் தயாராக இருந்தபோதும் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையும் புதிய அரசின் கோரிக்கையையும் கருத்திற்கொண்டு 6 மாதங்கள் பின்தள்ளப்பட்டு தற்போதைய அமர்வில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா.வால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிபாரிசுகள் கருத்துக்கள் மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டவையாகும்.இந்நிலையில் இந்த அறிக்கை வெளிவரமுதல் தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தொடர்புபடுத்தி விஷமப்பிரசாரம் செய்யப்பட்டன. அதில் தமிழரசுக் கட்சியின் தலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் மாற்றவேண்டும். இரண்டு கட்சிகளும் தமது சுய விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுகின்றன என சிலரால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
பொதுத் தேர்தலின்போது சுயேச்சைக் குழுக்களும் சுயநலக் குழுக்களும் தமிழ் மக்களிடையே விஷமப் பிரசாரம் செய்த மையினால் எமது பிரதிநிதித்துவத்தின் எண்
ணிக்கை குறைவடைந்தது.
அவ்வாறு இல்லாவிட்டால் யாழ்.,வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 7 பிரதிநிதித்துவங்களையும் பெற்றுக்கொண்டிருப்போம் என்றார்.
ஐ.நா.அறிக்கையூடாக போர்க்குற்ற விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பெறமுடியும்...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment