மன்னார் எமிழ் நகர் பகுதியில் அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி வெகு விரைவில் ஆரம்பிப்பு.
மன்னார் எமிழ் நகர் பகுதியில் சுமார் 23 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் ஆரம்பப்பனிகள் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த குறித்த அதி நவீன வசதிகளை கொண்ட குறித்த விளையாட்டு அரங்கு அரசியல் வாதி ஒருவரின் தலையீட்டினால் வேறு கிராமம் ஒன்றில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் மன்னார் எமிழ் நகர் பகுதியில் குறித்த விளையாட்டு அரங்கு அமைக்கும் பணிகள் சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டது.
அத்துடன் மாற்று கிராமம் ஒன்றில் குறித்த விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
உடனடியாக குறித்த விளையாட்டு அரங்கு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு,குறித்த மைதானம் எமிழ் நகர் பகுதியிலே அமைக்கப்பட வேண்டும் எனவும்,இதனால் சகல கிராம விளையாட்டு வீரர்களும் பயனடைவார்கள் என்பதை வழித்தினார்.
இந்த நிலையில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கு மாற்று இடத்தில் அமைக்காது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட மன்னார் எமிழ் நகர் பகுதியிலே அமைப்பதற்கான சகல அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் மன்னார் எமிழ் நகர் பகுதியில் சுமார் 23 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் ஆரம்பப்பனிகள் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் எமிழ் நகர் பகுதியில் அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி வெகு விரைவில் ஆரம்பிப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 15, 2015
Rating:

No comments:
Post a Comment