உலகிலேயே எந்த நாடுகளின் கடவுச்சீட்டுகள் அதிகம் சக்தி வாய்ந்தது? வெளியான புள்ளிவிபரங்கள்...
சர்வதேச அளவில் முன்கூட்டியே விசா பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் கொண்டுள்ள நாடுகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
PassportIndex என்ற இணையத்தளம் சர்வதேச அளவில் விமான பயணங்கள் மேற்கொள்வதில் 80 நாடுகளுக்குரிய சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பற்றிய ஆய்வை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளும் சரி சமமான புள்ளிகள் பெற்று அதிக சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் கொண்டுள்ள நாடுகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளிலிருந்தும் முன்கூட்டியே விசா பெறாமல் 147 நாடுகளுக்கு பயணம் செய்யும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிலிருந்து முன்கூட்டிய விசா பெறாமல் 145 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
இத்தாலி மற்றும் ஸ்வீடன் 3வது இடத்திலும், டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், பின்லாந்து, லூக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து நாடுகள் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் 5வது இடத்திலும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சுவிஸ் மற்றும் கனடா நாடுகளிலிருந்து 142 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
இதே தரவரிசை பட்டியலில் முன்கூட்டிய விசா இல்லாமல் 47 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் இலங்கை 70வது இடத்திலும், 59 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இந்தியா 59வது இடத்தையும் பெற்றுள்ளது.
80 நாடுகளின் கடவுச்சீட்டுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் 28 நாடுகளுக்கு முன்கூட்டிய விசா இல்லாமல் 80வது இடத்தில் மியான்மர், தென் சூடான், பாலஸ்த்தீனம், சோலமன் தீவுகள், சவோ டோம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே எந்த நாடுகளின் கடவுச்சீட்டுகள் அதிகம் சக்தி வாய்ந்தது? வெளியான புள்ளிவிபரங்கள்...
Reviewed by Author
on
September 13, 2015
Rating:

No comments:
Post a Comment